Tuesday 3 September 2013

முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) வினாடி - வினா

1.     முஹம்மது நபி (ஸல்) அவர்களின் திருப்பெயரின் அர்த்தம் என்ன?
புகழுக்குறியவர் என்பதாகும்.

2.    
முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பெயர்கள் திருக்குர் ஆனில் எத்தனை முறை வருகிறது?
நான்கு தடவை வருகிறது.

3.    
முஹம்மது நபி (ஸல்) அவர்கள்; கடைசியாக செய்த செயல் எது?
மிஸ்வாக் (குச்சியால் பல் துலக்கினார்கள்)

4.    
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எந்த ஆடையை விரும்பினார்கள்?
நபி (ஸல்) வெண்ணிற ஆடையை அதிகம் விரும்பியுள்ளார்கள் பச்சைநிற ஆடையையும் விரும்பியுள்ளார்கள்.

5.    
முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பண்பு  எப்படி இருந்தது?
மிக உயர்ந்த பண்புடனும், குர்ஆனுக்கு முன்மாதிரியாகவும்  இருந்தது.

6.    
முஹம்மது நபி (ஸல்)அவர்களின் பெரிய அற்புதம் எது?
 
அல்குர்ஆன் அகும்.

7.    
முஹம்மது நபி (ஸல்) அவர்கள்; எந்த பொருளை மறுக்க கூடாது என்றார்கள்?
தலையணை, எண்ணை, நறுமணப் பொருள், பால்

8.    
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு முன் அவர்களுக்கு இறைவன் வைத்த பெயர் என்ன?
அஹ்மது என்ற பெயராகும்.

9.    
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இவ்வுலகில் பிறந்த பின் இறைவன் வைத்த பெயர் என்ன?
முஹம்மது  என்ற பெயராகும்.

10.   முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மறைந்த பின் மறுமையில் இறைவன் வைக்கும் பெயர் என்ன?
மஹ்மூது  என்ற பெயராகும்.

No comments:

Post a Comment