Thursday, 12 September 2013

முஸ்லிம் கண்டிப்பாக தாடி வைக்கவேண்டும்!




“நம்பிக்கையாளர்களுக்கு அவர்களது உயிர்களை விட நபியே மிக்க மேலானவராவார்…” (33:6)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“உங்களில் ஒருவர் தனது பெற்றோர், பிள்ளைகள் மற்றும் முழு மனித சமூகத்தையும் விட என்னை அதிகமாக நேசிக்காத வரையில் முஃமினாக முடியாது!”

நபி (ஸல்) அவர்கள் கூறும்போது.
حدثنا محمد بن منهال حدثنا يزيد بن زريع حدثنا عمر بن محمد بن زيد عن نافع عن ابن عمر عن النبي صلى الله عليه وسلم قال خالفوا المشركين وفروا اللحى وأحفوا الشوارب وكان ابن عمر إذا حج أو اعتمر قبض على لحيته فما فضل أخذه

“இணை வைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்: தாடிகளை வளரவிடுங்கள். மீசையை ஒட்ட நறுக்குங்கள்” அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல் : புகாரி (5892)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
حدثني أبو بكر بن إسحق أخبرنا ابن أبي مريم أخبرنا محمد بن جعفر أخبرني العلاء بن عبد الرحمن بن يعقوب مولى الحرقة عن أبيه عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم جزوا الشوارب وأرخوا اللحى خالفوا المجوس

“மீசையை ஒட்டக் கத்தரியுங்கள். தாடியை வளர விடுங்கள். மஜூசி (நெருப்பு வணங்கி)களுக்கு மாறு செய்யுங்கள்” அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) நூல் : முஸ்லிம் ( 435 )

“யார் (மாற்றுக் கொள்கையில் உள்ள) ஒரு கூட்டத்தாருக்கு ஒப்ப நடக்கின்றாரோ அவர் அவர்களையேச் சார்ந்தவர்” அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) அவர்கள் நூல் : அபூதாவுத் (3512)

No comments:

Post a Comment