Showing posts with label quran. Show all posts
Showing posts with label quran. Show all posts

Monday, 21 May 2018

ஹலால் - HALAL



وَلَا تَاْكُلُوْا مِمَّا لَمْ يُذْكَرِ اسْمُ اللّٰهِ عَلَيْهِ وَاِنَّهٗ لَفِسْقٌ ؕ وَاِنَّ الشَّيٰطِيْنَ لَيُوْحُوْنَ اِلٰٓى اَوْلِيٰٓـٮِٕـهِمْ لِيُجَادِلُوْكُمْ‌ ۚ وَاِنْ اَطَعْتُمُوْهُمْ اِنَّكُمْ لَمُشْرِكُوْنَ‏ 

எதன்மீது. (அறுக்கும்போது) அல்லாஹ்வின் பெயர் கூறப்படவில்லையோ அதைப் புசியாதீர்கள் - நிச்சயமாக அது பாவமாகும்; நிச்சயமாக ஷைத்தான்கள் தங்கள் நண்பர்களை உங்களோடு (வீண்) தர்க்கம் செய்யுமாறு தூண்டுகிறார்கள் - நீங்கள் அவர்களுக்கு வழிபட்டால், நிச்சயமாக நீங்களும் முஷ்ரிக்குகள் (இணைவைப்போர்) ஆவீர்கள். Al Quran - 6:121

And do not eat of that upon which the name of Allah has not been mentioned, for indeed, it is grave disobedience. And indeed do the devils inspire their allies [among men] to dispute with you. And if you were to obey them, indeed, you would be associators [of others with Him]. Al Quran - 6:121


Thursday, 31 October 2013

இஸ்லாம் ஐந்து காரியங்கள் மீது நிர்மானிக்கப்பட்டுள்ளது.!

1- வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத்
தவிர வேறுயாருமில்லை, முஹம்மது (ஸல்)
அவர்கள் அல்லாஹ்வுடைய தூதராவார்கள்
என்று சாட்சி கூறுவது,

2- தொழுகையை நிலை நாட்டுவது

3- ரமளான் மாதம் நோன்பு நோற்பது

4- ஹஜ் செய்வது

5- ஜகாத் கொடுப்பது என்று நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : இப்னு உமர் -ரலி, நூல் :
புகாரீ)


தொழுகையை நிலைநாட்டும்படி அல்லாஹ்
சுமார் 80 இடங்களில் அல்குர்ஆனில்
கட்டளையிட்டுள்ளான். அதில் சில
வசனங்களையும் தொழுகையைப் பற்றிய
நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளில்
சிலவற்றையும் தங்களின்
நினைவுக்கு கொண்டு வருகிறோம்.

அல்லாஹ்
நம் அனைவரையும் ஈருலகிலும்
வெற்றிபெறும் தொழுகையாளிகளாக
ஆக்கியருள்வானாக!

1- தொழுகைக் கடமை

நிச்சயமாக நான்தான் அல்லாஹ்! என்னைத்
தவிர வேறு நாயன் இல்லை. ஆகவே,
என்னையே நீர் வணங்குவீராக!
என்னை நினைவு கூறும்
பொருட்டு தொழுகையை நிலைநிறுத்துவீராக!
(அல்குர்ஆன் 20:14)

அல்லாஹ்வுக்கு வணக்கத்தை தூய்மையாக்கியவர்களாக
(தவறான வழியிலிருந்து விலகி சரியான
வழியில்) பிடிப்புள்ளவர்களாக
அல்லாஹ்வை வணங்க வேண்டும் மேலும்
தொழுகையை நிலைநாட்டவேண்டும் மேலும்
ஜகாத்தை வழங்க வேண்டும் என்பதைத் தவிர
(வேறெதுவும்) அவர்களுக்குக்
கட்டளையிடப்படவில்லை. இதுதான் நேரான
மார்க்கமாகும்.
(அல்குர்ஆன் 98:5)

நபி(ஸல்) தனது மரண வேளையில்கூட
"தொழுகை! தொழுகை!" என கூறிக்
கொண்டிருந்தார்கள்.
(அறிவிப்பவர் : உம்மு ஸலமா-ரலி, நூல் :
இப்னுமாஜா)

குழந்தைகள் ஏழு வயதை அடையும்
போது அவர்களைத் தொழும்படி ஏவுங்கள்!
பத்து வயதை அடைந்து விட்டால்
அடித்தாவது தொழ வையுங்கள்! என
நபி(ஸல்) கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அம்ர் பின் ஷுஐப் -ரலி, நூல் :
அபுதாவூத்)


2- போர்க்களத்திலும் தொழுகை

(பகைவர்களையோ அல்லது வேறெதையுமோ கொண்டு)
நீங்கள் பயப்படும் நிலையில் இருந்தால்,
நடந்து கொண்டோ அல்லது சவாரி செய்து கொண்டோவாகிலும்
தொழுது கொள்ளுங்கள்!
(அல்குர்ஆன் 2:239)


3- உரிய நேரத்தில் தொழவேண்டும்

நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில்
தொழுகையை நிறைவேற்றுவது முஃமின்கள்
மீது கடமையாக்கப் பட்டுள்ளது. (அல்குர்ஆன்
4:103)

தொழுகைகளை (குறிப்பாக)
நடுத்தொழுகையை பேணிக் கொள்ளுங்கள்!
(தொழுகையின் போது) அல்லாஹ்வின்
முன்னிலையில் உள்ளச்சத்துடன் நில்லுங்கள்!
(அல்குர்ஆன் 2:238)


4- மானக்கேடை விட்டும் விலகிட
தொழுகையை நிலை நிறுத்துவீராக,

நிச்சயமாக தொழுகை (மனிதரை)
மானக்கேடானவற்றையும் தீமையையும்
விட்டு விலக்கும். நிச்சயமாக, அல்லாஹ்வின்
திக்ரு (தியானம்) மிகவும் பெரிதா(ன
சக்தியா)கும் அன்றியும் அல்லாஹ் நீங்கள்
செய்பவற்றை நன்கறிகிறான். (அல்குர்ஆன்
29:45)


5- தொழுகையாளியே வெற்றியாளர்

ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக
வெற்றி பெற்று விட்டார்கள். அவர்கள்
எத்தகையோரென்றால், தங்கள் தொழுகையில்
உள்ளச்சத்தோடு இருப்பார்கள். (அல்குர்ஆன்
23.1-2)

தூய்மையடைந்தவன் திட்டமாக
வெற்றி பெறுகிறான். மேலும், அவன் தன்
இறைவனுடைய நாமத்தைத் துதித்துக்
கொண்டும், தொழுது கொண்டும் இருப்பான்.
(அல்குர்ஆன் 87:14-15)

பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்
கொண்டும் (அல்லாஹ்விடம்)
உதவி தேடுங்கள்! எனினும், நிச்சயமாக
இது உள்ளச்சம்
உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும்
பாரமாகவேயிருக்கும். (அல்குர்ஆன் 2:45)

நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும்,
தொழுகையுடனும் (இறைவனிடம்)
உதவி தேடுங்கள்! நிச்சயமாக அல்லாஹ்
பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்.
(அல்குர்ஆன் 2:153)


6- சுவனத்தின் வாரிசுதாரர

மேலும் அவர்கள் தம் தொழுகைகளை(க்
குறித்த காலத்தில் முறையோடு)
பேணுவார்கள். இத்தகையோர் தாம்
(சுவர்க்கத்தின்) வாரிசுதாரர்கள். இவர்கள்
ஃபிர்தவ்ஸ் (என்னும் சுவனபதியை)
அனந்தரங்கொண்டு அதில் இவர்கள்
என்றென்றும் தங்கியிருப்பார்கள். (அல்குர்ஆன்
23:9-11)


யார் தொழுகையை பேணிக்
கொள்கிறாரோ அவருக்கு அத்தொழுகை பிரகாசமாகவும்,
அத்தாட்சியாகவும், மறுமை நாளில்
ஈடேற்றமாகவும் இருக்கும். யார்
அதை பேணிக்கொள்ள
வில்லையோ அவருக்கு அத்தொழுகை பிரகாசமாகவோ,
அத்தாட்சியாகவோ,
ஈடேற்றமாகவோ இருக்காது. மாறாக 'அவர்
மறுமை நாளில் -காஃபிர்களாகிய- காருன்,
ஃபிர்அவ்ன், ஹாமான், உபை இப்னு கலப்
ஆகியவர்களுடன் இருப்பார்', என நபி (ஸல்)
எச்சரித்தார்கள்.
(அறிவிப்பவர்: அப்துல்லாஹ் -ரலி, நூல்:
அஹ்மத்)

மக்களே! ஸலாத்தைப் பரப்புங்கள்!
பிறருக்கு உணவளியுங்கள்! உறவினர்களுடன்
இணைந்து வாழ..

Tuesday, 15 October 2013

What has caused you to enter HELL??


"உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது?" (என்று கேட்பார்கள்.) 
 அவர்கள் (பதில்) கூறுவார்கள்; "தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை.
 "அன்றியும், ஏழைகளுக்கு நாங்கள் உணவும் அளிக்கவில்லை.

AL-TAKATHUR (102)

Competition in [worldly] increase diverts you.
செல்வத்தைப் பெருக்கும் ஆசை உங்களை (அல்லாஹ்வை விட்டும்) பராக்காக்கி விட்டது-(1)

Until you visit the graveyards.
நீங்கள் கப்றுகளைச் சந்திக்கும் வரை. (2)

No! You are going to know.
அவ்வாறில்லை, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள். (3)

Then no! You are going to know.
பின்னர் அவ்வாறல்ல, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள். (4)

No! If you only knew with knowledge of certainty...
அவ்வாறல்ல - மெய்யான அறிவைக் கொண்டறிந்திருப்பீர்களானால் (அந்த ஆசை உங்களைப் பராக்காக்காது). (5)

You will surely see the Hellfire.
நிச்சயமாக (அவ்வாசையால்) நீங்கள் நரகத்தைப் பார்ப்பீர்கள். (6)

Then you will surely see it with the eye of certainty.
பின்னும், நீங்கள் அதை உறுதியாகக் கண்ணால் பார்ப்பீர்கள். (7)

Then you will surely be asked that Day about pleasure.
பின்னர் அந்நாளில் (இம்மையில் உங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த) அருட் கொடைகளைப் பற்றி நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள். (8)


PROPER WAY OF WEARING HIJAB



And tell the believing women to reduce [some] of their vision and guard their private parts and not expose their adornment except that which [necessarily] appears thereof and to wrap [a portion of] their headcovers over their chests and not expose their adornment except to their husbands, their fathers, their husbands' fathers, their sons, their husbands' sons, their brothers, their brothers' sons, their sisters' sons, their women, that which their right hands possess, or those male attendants having no physical desire, or children who are not yet aware of the private aspects of women. And let them not stamp their feet to make known what they conceal of their adornment. And turn to Allah in repentance, all of you, O believers, that you might succeed.


இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது இன்னும் தங்கள் முன்தானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.

AL-QUR'AN - 24:31

Monday, 9 September 2013

Allah will give you more..


 நீங்கள் நன்றி செலுத்தினால், உங்களுக்கு நிச்சயமாக நான் (என்னருளை) அதிகமாக்குவேன்; (அவ்வாறில்லாது) நீங்கள் மாறு செய்தீர்களானால் நிச்சயமாக என்னுடைய வேதனை மிகக் கடுமையானதாக இருக்கும்" 

'If you are grateful, I will surely increase you [in favor]; but if you deny, indeed, My punishment is severe.' 

Sunday, 8 September 2013

எங்கள் இறைவனே!

"Rabbana zalamna anfusana, wa in lam taghfir lana wa tarhamna la-nakunanna minal-khaasirin."

رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ

"எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் - நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்"

"Our Lord, we have wronged ourselves, and if You do not forgive us and have mercy upon us, we will surely be among the losers."

அல்லாஹ் - அவனைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறில்லை

We have not sent down to you the Qur'an that you be distressed.
(நபியே!) நீர் துன்பப்படுவதற்காக நாம் இந்த குர்ஆனை உம்மீது இறக்கவில்லை.

But only as a reminder for those who fear [ Allah ] -
(அல்லாஹ்வுக்கு) அஞ்சுவோருக்கு நல்லுபதேசமே அன்றி (வேறில்லை).

A revelation from He who created the earth and highest heavens,
பூமியையும், உயர்வான வானங்களையும் படைத்தவனிடமிருந்து அது இறக்கி அருளப் பெற்றது.

The Most Merciful [who is] above the Throne established.
அர்ரஹ்மான் அர்ஷின் மீது அமைந்தான்.

To Him belongs what is in the heavens and what is on the earth and what is between them and what is under the soil.
வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும், இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவையும், மண்ணுக்கு அடியில் உள்ளவையும் அவனுக்கே உரியன.

And if you speak aloud - then indeed, He knows the secret and what is [even] more hidden.
(நபியே!) நீர் உரக்கச் சொன்னாலும் நிச்சயமாக அவன் இரகசியத்தையும் (அதை விட) மறைவானதையும் அறிகிறான்.

Allah - there is no deity except Him. To Him belong the best names.
அல்லாஹ் - அவனைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறில்லை, அவனுக்கு அழகிய திரு நாமங்கள் இருக்கின்றன.

AL-QUR'AN[20:2-8]

Saturday, 7 September 2013

NONE KNOW THIS EXCEPT ALLAH....

نَّ اللَّـهَ عِندَهُ عِلْمُ السَّاعَةِ وَيُنَزِّلُ الْغَيْثَ وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ ۖ وَمَا تَدْرِي نَفْسٌ مَّاذَا تَكْسِبُ غَدًا ۖوَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ ۚ إِنَّ اللَّـهَ عَلِيمٌ خَبِيرٌ 

Indeed, Allah [alone] has knowledge of the Hour and sends down the rain and knows what is in the wombs. And no soul perceives what it will earn tomorrow, and no soul perceives in what land it will die. Indeed, Allah is Knowing and Acquainted.

நிச்சயமாக அந்த (கியாம) நேரம் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது அவனே மழையையும் இறக்குகிறான்; இன்னும் அவன் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் அறிகிறான். நாளை தினம் தாம் (செய்வது) சம்பாதிப்பது எது என்பதை எவரும் அறிவதில்லை தான் எந்த பூமியில் இறப்போம் என்பதையும் எவரும் அறிவதில்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கறிபவன்; நுட்பம் மிக்கவன்.

AL-QUR'AN [31:34]

Friday, 6 September 2013

The best day of the week..



يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِن يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَىٰ ذِكْرِ اللَّـهِ وَذَرُوا الْبَيْعَ ۚ ذَٰلِكُمْ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ
O you who have believed, when [the adhan] is called for the prayer on the day of Jumu'ah [Friday], then proceed to the remembrance of Allah and leave trade. That is better for you, if you only knew.

ஈமான் கொண்டவர்களே! ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிக்கு) விரைந்து செல்லுங்கள் - நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும்.
(AL QUR'AN-62:9)


فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِن فَضْلِ اللَّـهِ وَاذْكُرُوا اللَّـهَ كَثِيرًا لَّعَلَّكُمْ تُفْلِحُونَ
And when the prayer has been concluded, disperse within the land and seek from the bounty of Allah , and remember Allah often that you may succeed.

பின்னர், (ஜுமுஆ) தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டதும், (பள்ளியிலிருந்து வெளிப்பட்டு) பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள், அன்றியும், நீங்கள் வெற்றியடையும் பொருட்டு, அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யுங்கள்.
(AL QUR'AN-62:10)


وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انفَضُّوا إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا ۚ قُلْ مَا عِندَ اللَّـهِ خَيْرٌ مِّنَ اللَّـهْوِ وَمِنَ التِّجَارَةِ ۚ وَاللَّـهُ خَيْرُ الرَّازِقِينَ
But when they saw a transaction or a diversion, [O Muhammad], they rushed to it and left you standing. Say, "What is with Allah is better than diversion and than a transaction, and Allah is the best of providers."

இன்னும், (நபியே!) அவர்களில் (சிலர்) ஒரு வியாபாரத்தையோ, அல்லது ஒரு வேடிக்கையையோ, கண்டால், அதன்பால் அவர்கள் சென்று விடுகின்றனர். மேலும், நின்ற வண்ணமே உம்மை விட்டுவிடுகின்றனர், "அல்லாஹ்விடத்தில் இருப்பது, வேடிக்கையை விடவும் வியாபாரத்தை விடவும் மிகவும் மேலானதாகும், மேலும் அல்லாஹ் உணவளிப்பவர்களில் மிகவும் மேலானவன்" என்று (நபியே!) நீர் கூறுவீராக.

(AL QUR'AN-62:11)

Thursday, 5 September 2013

ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர்..

قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ
Certainly will the believers have succeeded:
ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர். 

الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ
They who are during their prayer humbly submissive.
அவர்கள் எத்தகையயோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள்.

وَالَّذِينَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُونَ
And they who turn away from ill speech
இன்னும், அவர்கள் வீணான (பேச்சு, செயல் ஆகிய)வற்றை விட்டு விலகியிருப்பார்கள்.

وَالَّذِينَ هُمْ لِلزَّكَاةِ فَاعِلُونَ
And they who are observant of zakah
ஜகாத்தையும் தவறாது கொடுத்து வருவார்கள்.

وَالَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَافِظُونَ
And they who guard their private parts
மேலும், அவர்கள் தங்களுடைய வெட்கத் தலங்களைக் காத்துக் கொள்வார்கள்.

AL QUR'AN [23:1,2,3,4,5]

எங்கள் இறைவனே..! எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக..!

رَّبَّنَا إِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُنَادِي لِلْإِيمَانِ أَنْ آمِنُوا بِرَبِّكُمْ فَآمَنَّا ۚ رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الْأَبْرَارِ

"Rabbana innana sami'na munadiyan yunadi lil imani an aminu bi-Rabbikum fa-amanna, Rabbana faghfir lana dhunubana wa kaffir 'anna sayyiatina wa tawaffana ma'al-abrar. Rabbana wa atina ma wa'adta-na 'ala russuli-ka wa la tikhzi-na yauma-l-qiyamati innaka latukhlifu-l-mi'ad." (3:194)

"Our Lord! We have heard the call of one calling (us) to faith, saying, Believe in your Lord; so we do believe; our lord! forgive us our faults and cover our evil deeds and make us die with the righteous; Our Lord! and grant us what Thou hast promised us by Thy messengers and disgrace us not on the day of reserrection; surely Thou dost not fail to perform the promise." 

"எங்கள் இறைவனே! உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்று ஈமானின் பக்கம் அழைத்தவரின் அழைப்பைச் செவிமடுத்து நாங்கள் திடமாக ஈமான் கொண்டோம்; "எங்கள் இறைவனே! எங்களுக்கு, எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக! இன்னும், எங்க(ளுடைய ஆன்மாக்க)ளைச் சான்றோர்களு(டைய ஆன்மாக்களு)டன் கைப்பற்றுவாயாக!" (என்றும்;).

Allah is Exalted in Might and Wise

وَلَوْ أَنَّمَا فِي الْأَرْضِ مِن شَجَرَةٍ أَقْلَامٌ وَالْبَحْرُ يَمُدُّهُ مِن بَعْدِهِ سَبْعَةُ أَبْحُرٍ مَّا نَفِدَتْ كَلِمَاتُ اللَّـهِ ۗإِنَّ اللَّـهَ عَزِيزٌ حَكِيمٌ

மேலும், நிச்சயமாக இப்பூமியிலுள்ள மரங்கள் யாவும் எழுது கோல்களாகவும், கடல் (நீர் முழுதும்) அதனுடன் கூட மற்றும் ஏழு கடல்கள் அதிகமாக்கப்பட்டு (மையாக) இருந்த போதிலும், அல்லாஹ்வின் (புகழ்) வார்த்தைகள் முடிவுறா நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன்; ஞானம் மிக்கோன்.

And if whatever trees upon the earth were pens and the sea [was ink], replenished thereafter by seven [more] seas, the words of Allah would not be exhausted. Indeed, Allah is Exalted in Might and Wise.

Tuesday, 3 September 2013

TRUST IN ALLAH WHEN MAKING DECISIONS..

فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللَّـهِ لِنتَ لَهُمْ ۖ وَلَوْ كُنتَ فَظًّا غَلِيظَ الْقَلْبِ لَانفَضُّوا مِنْ حَوْلِكَ ۖفَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِي الْأَمْرِ ۖ فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّـهِ ۚ إِنَّ اللَّـهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ

So by mercy from Allah , [O Muhammad], you were lenient with them. And if you had been rude [in speech] and harsh in heart, they would have disbanded from about you. So pardon them and ask forgiveness for them and consult them in the matter. And when you have decided, then rely upon Allah . Indeed, Allah loves those who rely [upon Him].

அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்;. (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள்;. எனவே அவர்களின் (பிழைகளை) அலட்சியப்படுத்திவிடுவீராக. அவ்வாறே அவர்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக. தவிர, சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும், பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின்; மீதே பொறுப்பேற்படுத்துவீராக! - நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான்.
 رُّبَمَا يَوَدُّ الَّذِينَ كَفَرُوا لَوْ كَانُوا مُسْلِمِينَ

Perhaps those who disbelieve will wish that they had been Muslims.



Respect your Parents and Make DUA for them...

وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا وَحَمْلُهُ وَفِصَالُهُ ثَلَاثُونَ شَهْرًا حَتَّى إِذَا بَلَغَ أَشُدَّهُ وَبَلَغَ أَرْبَعِينَ سَنَةً قَالَ رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَى وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَصْلِحْ لِي فِي ذُرِّيَّتِي إِنِّي تُبْتُ إِلَيْكَ وَإِنِّي مِنَ الْمُسْلِمِينَ﴿15

And We have enjoined upon man, to his parents, good treatment. His mother carried him with hardship and gave birth to him with hardship, and his gestation and weaning [period] is thirty months. [He grows] until, when he reaches maturity and reaches [the age of] forty years, he says, "My Lord, enable me to be grateful for Your favor which You have bestowed upon me and upon my parents and to work righteousness of which You will approve and make righteous for me my offspring. Indeed, I have repented to You, and indeed, I am of the Muslims."

மனிதன் தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படி உபதேசம் செய்தோம்அவனுடைய தாய்வெகு சிரமத்துடனேயே அவனைச் சுமந்து வெகு சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுக்கிறாள்; (கர்ப்பத்தில்) அவனைச் சுமப்பதும்அவனுக்குப் பால் குடி மறக்கச் செய்வதும் (மொத்தம்) முப்பதுமாதங்களாகும். அவன் வாலிபமாகிநாற்பது வயதை அடைந்ததும்; "இறைவனே! நீ என் மீதும்என் பெற்றோர் மீதும் புரிந்த நிஃமத்துக்காக, (அருள் கொடைகளுக்காக) நன்றி செலுத்தவும்உன்னுடைய திருப்தியை அடையக் கூடிய ஸாலிஹான நல்ல அமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக! (இதில் எனக்கு உதவுவதற்காக) என்னுடைய சந்ததியையும் ஸாலிஹானவர்களாக (நல்லது செய்பவர்களாக) சீர்படுத்தியருள்வாயாக! நிச்சயமாக நான்உன்பக்கமே திரும்புகிறேன்அன்றியும்நான் முஸ்லிம்களில் நின்றுமுள்ளவனாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவனாக) இருக்கின்றேன்"என்று கூறுவான்.

AL QUR'AN-46:15

Don't Speak whatever you know..

 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَكُونُوا كَالَّذِينَ آذَوْا مُوسَى فَبَرَّأَهُ اللَّهُ مِمَّا قَالُوا وَكَانَ عِندَ اللَّهِ وَجِيهًا ﴿69

O you who have believed, be not like those who abused Moses; then Allah cleared him of what they said. And he, in the sight of Allah , was distinguished.

ஈமான் கொண்டவர்களே! மூஸாவை(ப் பற்றி அவதூறு கூறி) நோவினை செய்தவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள்ஆனால் அவர்கள் கூறியதை விட்டு அல்லாஹ் அவரைப் பரிசுத்தமானவராக்கி விட்டான்மேலும் அவர் அல்லாஹ்விடத்தில் கண்ணிய மிக்கவராகவே இருந்தார்.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا ﴿70

O you who have believed, fear Allah and speak words of appropriate justice.

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (எந்நிலையிலும்) நேர்மையான சொல்லையே சொல்லுங்கள்.

يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَن يُطِعْ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا ﴿71

He will [then] amend for you your deeds and forgive you your sins. And whoever obeys Allah and His Messenger has certainly attained a great attainment.

(அவ்வாறு செய்வீர்களாயின்) அவன் உங்களுடைய காரியங்களை உங்களுக்குச் சீராக்கி வைப்பான்உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிப்பான்அன்றியும் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் எவர் வழிப்படுகிறாரோஅவர் மகத்தான வெற்றி கொண்டு விட்டார்.

AL QUR'AN - 33:69,70,71
"Rabbana innaka man tudkhilin-nara fa-qad akhzaytahu, wa ma liz-zalimina min ansar." (3:192)

"Our Lord! surely whomsoever Thou makest enter fire, him Thou hast indeed brought to disgrace, and there shall be no helpers for the unjust."

எங்கள் இறைவனே! நீ எவரை நரக நெருப்பில் புகுத்துகின்றாயோ அவரை நிச்சயமாக நீ இழிவாக்கிவிட்டாய்;. மேலும்அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவருமிலர்! (என்றும்)

Sunday, 1 September 2013

~ HOPE IN ALLAH ~ DON'T LOSE YOUR HOPE



LA HAWLA LA QUWAT ILLA BILLAH
‘O ALLAH no good deeds will be brought but by You, and no harm will be prevented but by You and no power or strength but by You.’ [Abu Dawud]

ALLAH says:
Then did they feel secure from the plan of Allah ? But no one feels secure from the plan of Allah except the losing people.

அல்லாஹ்வின் சூழ்ச்சியிலிருந்து அவர்கள் அச்சம் தீர்ந்து விட்டார்களாநஷ்ட வாளிகளான மக்களைதவிரவேறு எவரும் அல்லாஹ்வின் சூழ்ச்சியிலிருந்து அச்சம் தீர்ந்து இருக்கமாட்டார்கள். [7: 99]

And decree for us in this world [that which is] good and [also] in the Hereafter; indeed, we have turned back to You." [ Allah ] said, "My punishment - I afflict with it whom I will, but My mercy encompasses all things." So I will decree it [especially] for those who fear Me and give zakah and those who believe in Our verses -” 
இன்னும் இவ்வுலகத்திலும்மறுமையிலும் எங்களுக்கு (அழகிய) நன்மைகளையே விதித்தருள்வாயாக! நிச்சயமாக நாங்கள்உன்னையே முன்னோக்குகிறோம் (என்றும் பிரார்த்தித்தார்). அதற்கு இறைவன், "என்னுடைய அருளானது எல்லாப் பொருள்களிலும் (விரிந்து,பரந்து) சூழ்ந்து நிற்கிறது எனினும் அதனை பயபக்தியுடன் (பேணி) நடப்போருக்கும், (முறையாக) ஜகாத்து கொடுத்து வருவோருக்கும் நம்முடைய வசனங்களை நம்புகிறவர்களுக்கும் நான் விதித்தருள் செய்வேன்என்று கூறினான்.
[7 :156]

And [mention] when your Lord declared that He would surely [continue to] send upon them until the Day of Resurrection those who would afflict them with the worst torment. Indeed, your Lord is swift in penalty; but indeed, He is Forgiving and Merciful.” 
(நபியே!) அவர்களுக்குக் கொடிய வேதனை கொடுக்க கூடியவர்களையேஅவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துமாறு கியாம நாள் வரை நாம் செய்வோமென்று உங்கள் இறைவன் அறிவித்ததை (அவர்களுக்கு நினைவூட்டுவீராக) -நிச்சயமாக உம் இறைவன் தண்டனையளிப்பதில் தீவிரமானவன் - ஆனால் நிச்சயமாக அவன்மிகவும் மன்னிப்பவனாகவும்,கிருபையாளனாகவும் இருக்கின்றான். [7: 167]

[By] that We repaid them because they disbelieved. And do We [thus] repay except the ungrateful?
அவர்கள் நிராகரித்ததன் காரணமாக அவர்களுக்கு இக்கூலியைநாம் கொடுத்தோம். (நன்றி மறந்து) நிராகரித்தோருக்கன்றி வேறெவருக்கும் நாம் (இத்தகைய) கூலியைக் கொடுப்போமா[34: 17]

Say, "O My servants who have transgressed against themselves [by sinning], do not despair of the mercy of Allah . Indeed, Allah forgives all sins. Indeed, it is He who is the Forgiving, the Merciful."
என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும்அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் - நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் - நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்மிக்கக்கருணையுடையவன் (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக. [39: 53]





It is He who created you from one soul and created from it its mate that he might dwell in security with her. And when he covers her, she carries a light burden and continues therein. And when it becomes heavy, they both invoke Allah , their Lord, "If You should give us a good [child], we will surely be among the grateful."


அவனேஉங்களை ஒரே மனிதரிலிருந்து படைத்தான்அவருடன் கூடி (இணைந்து) வாழ்வதற்காக அவருடைய துணைவியை(அவரிலிருந்தே) படைத்தான் - அவன் அவளை நெருங்கிய போது அவள் இலேசானகர்ப்பவதியானாள்பின்பு அதனைச் சுமந்து நடமாடிக் கொண்டிருந்தாள்பின்பு அதுபளுவாகவேஅவர்களிருவரும் தம்மிருவரின் இறைவனிடம், "(இறைவனே!) எங்களுக்கு நீ நல்ல (சந்ததியைக்) கொடுத்தால்நிச்சயமாக நாங்கள் இருவரும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்"என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தனர். [AL QUR'AN 7:189]

And of His signs is that He created for you from yourselves mates that you may find tranquillity in them; and He placed between you affection and mercy. Indeed in that are signs for a people who give thought..

இன்னும்நீங்கள் அவர்களிடம் ஆறதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன்படைத்திருப்பதும்உங்களுக்கிடையே உவப்பையும்கிருபையையும்உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாகஇதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன. [AL QUR'AN 30:21]