Tuesday, 15 October 2013

AL-TAKATHUR (102)

Competition in [worldly] increase diverts you.
செல்வத்தைப் பெருக்கும் ஆசை உங்களை (அல்லாஹ்வை விட்டும்) பராக்காக்கி விட்டது-(1)

Until you visit the graveyards.
நீங்கள் கப்றுகளைச் சந்திக்கும் வரை. (2)

No! You are going to know.
அவ்வாறில்லை, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள். (3)

Then no! You are going to know.
பின்னர் அவ்வாறல்ல, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள். (4)

No! If you only knew with knowledge of certainty...
அவ்வாறல்ல - மெய்யான அறிவைக் கொண்டறிந்திருப்பீர்களானால் (அந்த ஆசை உங்களைப் பராக்காக்காது). (5)

You will surely see the Hellfire.
நிச்சயமாக (அவ்வாசையால்) நீங்கள் நரகத்தைப் பார்ப்பீர்கள். (6)

Then you will surely see it with the eye of certainty.
பின்னும், நீங்கள் அதை உறுதியாகக் கண்ணால் பார்ப்பீர்கள். (7)

Then you will surely be asked that Day about pleasure.
பின்னர் அந்நாளில் (இம்மையில் உங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த) அருட் கொடைகளைப் பற்றி நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள். (8)


No comments:

Post a Comment