Sunday, 13 October 2013

முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) வினாடி - வினா

31.   முஹம்மது நபி (ஸல்)  அவர்கள் இறைவழிபாட்டிற்காக தங்கியிருந்த குகையின் பெயர் என்ன?  
ஹிரா குகை

32.  
முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு எந்த வயதில் நபிப்பட்டம் கிடைத்தது?  40வது வயதில்

33.  
முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு நபித்துவம் கொண்டு வந்த வானவர் யார்?
ஹழ்ரத் ஜிப்ரயீல் (அலை) அவர்கள்.

34.  
முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு முதன்முதலில் இறங்கிய குர்ஆன் வாசகம் எது?
இக்றஃ பிஸ்மிரப்பிக்க 

35.  
முஹம்மது நபி (ஸல்)  அவர்கள் நபிப்பட்டம் கிடைத்த பிறகு எத்தனை ஆண்டுகள் மக்காவில் தங்கியிருந்தார்கள்?
13 ஆண்டுகள்

36.  
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதினா சென்ற நிகழ்ச்சிக்கு பெயர் என்ன?
ஹிஜ்ரத்

37.  
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் சென்ற போது உடன் சென்ற ஸஹாபி யார்?
ஹழ்ரத் அபூக்கர் ஸித்தீக் (ரலி) அவர்கள்

38.  
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மதீனா சென்ற பிறகு முதன் முதலில் கட்டிய பள்ளிவாசல் எது?
மஸ்ஜிதுன்னபவீ

39.   முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எத்தனை ஆண்டுகள் மதீனாவில் தங்கியிருந்தார்கள்?
10 ஆண்டுகள்.

40.  
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எத்தனை வயதில் இவ்வுலகை விட்டும் மறைந்தார்கள்?

63ம் வயதில்

No comments:

Post a Comment